யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் விபத்து : கணவன் பலி... மனைவி படுகாயம்!
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.
வவுனியா - ஈரற்பெரியகுளம் காவல்நிலையத்திற்கு முன்பாக நேற்று (29) இரவு 9.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
பேருந்தின் சாரதி கைது
இதன்போது பெரிய உளுக்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ். தில்ஹால் சதுரங்க என்ற 30 வயதுடையவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளதுடன் பலத்த காயமடைந்த அவரது மனைவி வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான சொகுசு பேருந்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இச்சம்பவம் குறித்து ஈரற்பெரியகுளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |