தூக்க கலக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்! பாரிய விபத்தில் சிக்குண்ட வாகனம்
Sri Lanka
Accident
By pavan
வேலை நிமித்தம் வெளிநாடு செல்லும் உறவினரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மீகஹதென்ன பகுதியில் இன்று (16) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
வேன் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
காயமடைந்தவர்கள் மீகஹதென்ன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி