கிணற்றில் தவறி விழுந்து மூன்றரை வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
Sri Lanka Police
Sri Lanka
By pavan
வெலிமடை, சில்மியாபுர பிரதேசத்தில் பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்து மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (01) பிற்பகல் சிறுமியின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
வெலிமடை, சில்மியாபுர பிரதேசத்தை சேர்ந்த என். எஸ். ஹமிதா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை
சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதேசவாசிகளின் உதவியுடன் சிறுமி மீட்கப்பட்ட போதிலும், காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பெட்டிபொல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்