பாரிய விபத்துக்குள்ளான பாடசாலை பேருந்து - 5 மாணவர்களுக்கு ஏற்பட்ட துயரம்
Tamil Nadu Police
Accident
By pavan
தியத்தலாவை பகுதியில், பாடசாலை பேருந்து ஒன்றும், தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவமானது இன்று (16) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொரலந்தையில் இருந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பண்டாரவளை நோக்கிப் பயணித்த பேருந்துடன், மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது, சிறு காயங்களுக்கு உள்ளான 5 மாணவர்களும், பாடசாலை பேருந்தின் சாரதியும், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில், தியத்தலாவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
