வவுனியாவில் ஹயஸ் வான் விபத்து - ஒருவர் படுகாயம் (படங்கள்)
வவுனியா- பூந்தோட்டம் குடியிருப்பு வீதியில் வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று மாலை (29.07.2023) இடம்பெற்றுள்ளது.
பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த ஹயஸ் வாகனத்துடன் எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் பெரும் சேதமடைந்துள்ளது.
விபத்துக்களுக்கு காரணம்

இந்தநிலையில், இந்த விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் பூந்தோட்டம் குடியிருப்பு வீதியில் மாலை வேளைகளில் அதிகமான வாகன விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான வீதி விபத்துக்களுக்கு அதிகபடியான வாகன நெரிசலே காரணம் என வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.