யாழில் இருந்து புறப்பட்ட அரச பேருந்து விபத்து!
Sri Lanka Police
Jaffna
Accident
By pavan
கிளிநொச்சி ஓமந்தையில் இலங்கை பேருந்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இச் சம்பவம் இன்று (19.11.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கனரக ரக வாகனம், ஓமந்தையில் வீதியில் படுத்திருந்த மாட்டினை கடப்பதற்கு முற்பட்ட வேளையில் பின்னால் வந்த இலங்கை பேருந்து சபைக்கு சொந்தமான பேருந்து கனரக வாகனத்தினை பின்னால் மோதியது.
விபத்து

இதனால் கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனம் வீதியை விட்டு விலகி வாகனம் தடம்புரண்டது.
இந்த விபத்தில் கனரக வாகனத்தில் பயணித்த இருவரும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி