வீதியருகே நடந்து சென்ற யுவதியை மோதிய பேருந்து - கொழும்பில் சம்பவம்
Colombo
Accident
By pavan
கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதிக்கு அருகில் தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (19) சனிக்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, சாலையோரம் நடந்து சென்ற பாதசாரிகள் மீது மோதியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் படுகாயமடைந்த பெண் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் அடையாளம் இதுவரை தெரியவில்லை என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியை கைது செய்த கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.