டிக் டொக் எடுத்துக்கொண்டு உந்துருளியுடன் கடலுக்குள் விழுந்த இளைஞன்! யாழில் சம்பவம் (படங்கள்)
Jaffna
By pavan
டிக் டொக்
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் உந்துருளியில் ரிக் ரொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
வியாழக்கிழமை(01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளார்.
இரண்டு நண்பர்கள்

இரண்டு நண்பர்கள் இணைந்து உந்துருளியில் டிக் டொக் எடுக்க முனைந்த போது உந்துருளியுடன் ஒருவர் கடலுக்குள்ளும் மற்றையவர் வெளியிலும் குதித்துள்ளனர்.
அதனையடுத்து அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும், பாதுகாப்பு தரப்பினரும் கடலில் வீழ்ந்த இளைஞரை மீட்டெடுத்ததுடன் உந்துருளியையும் மீட்டு கரைசேர்த்தனர்.
you may like this

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி