யாழில் ஆலயத்துக்கு சென்ற வயோதிபருக்கு நேர்ந்த அவலம் - தப்பிச் சென்ற மர்ம நபர்கள்
Jaffna
Sri Lanka Police Investigation
By pavan
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ஆலயத்துக்கு சென்ற வயோதிபரை மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (7) 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கோண்டாவில் பகுதியை சேர்ந்த கந்தையா வீரசிங்கம் (வயது 86) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி

வீதியை கடக்க ,முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவரை மோதிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி