யாழ்ப்பாணத்தில் விபத்து - 11 சிறுவர்கள் வைத்தியசாலையில்
Jaffna
Accident
By pavan
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் இன்று(14) இடம்பெற்றுள்ளது.
அதிகளவான முன்பள்ளி சிறுவர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
வைத்தியசாலையில் அனுமதி
குறித்த விபத்தில் சிக்கிய 11 முன்பள்ளி சிறுவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முச்சக்கரவண்டியின் சாரதியும் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்