வங்கியின் சுவரை உடைத்து சென்ற அதிசொகுசு வாகனம்!
Accident
By pavan
கஹவத்தை நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் சுவரை உடைத்துக் கொண்டு சொகுசு மகிழுந்து ஒன்று புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (22) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வங்கி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
மகிழுந்து சாரதி
வங்கிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வங்கியின் படிக்கட்டுக்கள் ஊடாக முன்னோக்கி சென்று வங்கியினுள் புகுந்துள்ளது.
குறித்த மகிழுந்தை பல் மருத்துவர் ஒருவர் செலுத்திச் சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி