மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் விபத்து! இருவர் படுகாயம்
accident
today
kalmunai
By Vanan
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளையில் இன்றிரவு (07) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகயமமைடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தயிசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பிலிருந்து மோட்டார் சைக்களில் ஒருவர் சென்ற போது, களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மற்றொரு மோட்டர் சைக்கிளில் வந்த ஒருவர் வீதியைக் கடக்க முற்பட்டபோது இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இதில் படுகாயடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



