யாழ் - அரியாலையில் வைத்தியர்கள் சென்ற கார் விபத்து!! ( படங்கள்)
accident
jaffna
ariyalai
By Vanan
யாழ்ப்பாணம் - அரியாலை மாம்பழம் சந்தியை அண்மித்த பகுதியில் நேற்றிரவு(25) கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த வைத்தியர்களின் வாகனமே வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ். பிரபல தனியார் விடுதியில் இருந்து வைத்தியர்கள் சிலர் குறித்த காரில் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். எனினும் காயமடைந்து மயக்கமடைந்த நிலையில் இருந்த ஒருவர், நோயாளர்காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.



