கோர விபத்து ஒன்றில் இளைஞர்கள் இருவர் பலி!
ஹொரான - மொரகஹஹேனா வீதியில் அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பருடன் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (19) அதிகாலை சுமார் 2.30 மணியளவில், ஹொரான - மொரகஹஹேன வீதியில் உள்ள கனன்வில விகாரை அருகே இடம்பெற்றுள்ளது.
25 மற்றும் 17 வயதுடைய தில்ஷான் மதுசரா செனவிரத்ன மற்றும் உதீஷ சித்மின என்ற இரு இளைஞர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் இருவர் பலி
விபத்து குறித்த விசாரணையில் மேலும் தெரியவருவதாவது, ஹொரான பகுதியில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அதிவேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த அந்த இரண்டு இளைஞர்களும், கனன்வில வளைவில் திரும்பவிருந்தபோது, வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் வலதுபுறப் பாதைக்குள் விலகி, எதிர்திசையில் இருந்து மணல் ஏற்றிச் சென்ற ஒரு டிப்பருடன் மோதி உள்ளது.
இதனால் மோட்டார் சைகிளில் பயணித்த இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் இன்று ஹொரான நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 3 மணி நேரம் முன்