புத்தாண்டு காலத்தில் நாட்டில் அதிகரித்த விபத்துக்கள் மற்றும் இறப்புக்கள்
இலங்கையில் தமிழ் - சிங்கள புத்தாண்டுடன் இணைந்த காலத்தில் விபத்துக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (03) இடம்பெற்ற இடைக்காலக் கூட்டத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
மற்றைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை வாகன விபத்துக்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை சுமார் 3 சதவீதம் அதிகமாகும் என சுகாதார அமைச்சின் விபத்து தடுப்புப் பிரிவின் நிபுணர் வைத்தியர் சமிதா சிறிதுங்க குறிப்பிட்டார்.
அதிகரித்த மது பாவனை
இதன்போது வீதி விபத்துக்களினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 வீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்றைய காலங்களுடன் ஒப்பிடும் போது இக்காலத்தில் மது பாவனை 4 - 7 சதவீதம் வரை அதிகரித்து விபத்துக்களையும் ஏற்படுத்துகிறது.
ஏனைய பருவங்களில் சுமார் 20 சதவீதமாக இருக்கும் பெண் மரணங்கள் வருடத்தில் 33 சதவீதமாக அதிகரிப்பதாகவும் அவர்களில் 50-60 வயதுக்குட்பட்டவர்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
நீரில் மூழ்கி உயிரிழப்பவர்கள்
இக்காலத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் கவனம் குறைந்துள்ளதால் அவர்களுக்கு ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |