18 துவிச்சக்கரவண்டிகள் திருட்டு: நாவற்குழியைச் சேர்ந்த ஒருவர் கைது
Sri Lanka Police
Sri Lankan Tamils
Jaffna
By Kiruththikan
18 துவிச்சக்கரவண்டிகள்
யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் துவிச்சகர வண்டிகளைத் திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் நாவற்குழியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் சந்தேக நபரிடமிருந்து 18 துவிச்சகரவண்டிகள் முழுமையாகவும் உதிரிப்பாகங்களாகவும் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி அவற்றை உதிரிப்பாகங்களாக்கி விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அண்மைய நாட்களாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு பிரதேசங்களில் துவிச்சக்கர வண்டி திருட்டுக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
