மூதூரில் கொல்லப்பட்ட 17 ஏ.சி.எப் தொண்டர்களுக்கு பரிஸில் அஞ்சலி!
இலங்கையின் மூதூர் பகுதியில் 2006 ஆம் ஆண்டில் செயற்பட்ட ஏசிஎப் எனப்படும் பட்டினிக்கெதிரான பிரெஞ்சு அமைப்பு தொண்டர்கள் 17பேர் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ளன.
20 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (04) பரிசின் புறநகர் பகுதியான கிளிச்சியில் நிறுவப்பட்டுள்ள நினைவுக்கல்லின் முன்பாக நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக இன்று முற்பகல் 11.00 மணிக்கு நினைவுச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.
கொல்லப்பட்டவர்களுக்கு நீதி
2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமிக்கு பின்னார் நிவாரண நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த பிரெஞ்சு மனிதாபிமான அமைப்பான பட்டினிக்கு எதிரான நடவடிக்கை அமைப்பைச் சேரந்த குறித்த 17 உள்ளூர் உதவிப் பணியாளர்கள், மரணதண்டனை நிறைவேற்றும் பாணியில் சிறிலங்கா அதிரடிப்ப படையினரால் கொல்லப்பட்டிருந்தனர்.

உலகில் மனிதாபிமானப் பணியாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகக் கொடூரமான இலக்கு வைக்கப்பட்ட குற்றத்திற்காக எந்தவொரு தனிநபர்மீது இதுவரை முறையாக வழக்குத் தொடரப்படவோ அல்லது தண்டிக்கப்படவோ இல்லை.
இந்த நிகழ்வில் ஏசிஎப் எனப்படும் பட்டினிக்கு எதிரான நடவடிக்கைஅமைப்பின் உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், மற்றும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டு நீதிகோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






