அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு : அடுத்த வாரம் தீர்மானம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) தாம் ஆதரிக்கும் வேட்பாளரை அறிவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் (Rishad Bathiudeen) தலைமையிலான இந்த கட்சி ஓகஸ்ட் 14 ஆம் திகதி குறித்த தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.
நேற்றிரவு (06) நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஆதரவு வழங்குமாறு கோரிக்கை
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ”ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து எங்கள் கட்சியின் உச்ச சபை விரிவான விவாதத்தை நடத்தியது.
அதன்படி, 14ஆம் திகதி காலை 10 மணிக்கு இறுதி தீர்மானம் எடுக்க முடிவு செய்துள்ளோம். அத்துடன், எமது கட்சி இன்னும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருப்பதால், அவர்கள் கூட்டணிக் கூட்டங்களில் பங்கேற்பார்கள்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) எங்களது ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன் தற்போதைய ஜனாதிபதியும் எங்களின் ஆதரவை கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.
நாம் கூறுவது தற்போதைய பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும். எங்களால் ரிவேர்ஸ் கியரில் திரும்பிச் செல்ல முடியாது”என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
