பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் -மக்களுக்கு விடுக்கப்பட்ட கடும் அறிவுறுத்தல்
பயணக்கட்டுப்பாடு நாளையதினம் தளர்த்தப்படும் நிலையில் பொதுமக்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் வேகமாக டெல்டா வைரஸ் பரவக்கூடிய சூழ்நிலை காணப்படுவதால் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை இறுக்கமாக பின்பற்றவேண்டும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல்ரோஹண வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர் பயணத்தடை காரணமாக பொதுமக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு நாட்டை திறப்பது கரிசனைக்குரிய விடயமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கையை குறைப்பதற்கு பொதுமக்கள் உதவவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர், பொதுமக்களின் பழக்க வழக்கங்களே நாட்டின் எதிர்காலத்தையும் பொருளாதாரத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.