அதிக விலைக்கு பொருட்களை விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை
அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்டம் கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களை அதிகாரசபை கேட்டுக்கொள்கிறது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை
அதன்படி, அத்தகைய முறைப்பாடுகளை மாவட்ட மட்டத்தில் நிறுவப்பட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விலைகளைக் காட்சிப்படுத்தாமல், அதிக விலைக்கு ஒரு தொகை காய்கறிகளை விற்பனை செய்த வியாபாரிகள் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குளியாப்பிட்டிய - கண்டி வீதியில், தெலியகொல்ல பகுதியிலுள்ள இரண்டு காய்கறிக் கடைகள் குருணாகல் மாவட்ட அதிகாரிகளால் இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |