காவல்துறையினரின் நடவடிக்கைகள் இரட்டிப்பாகும்: தேசபந்து தென்னகோன் அதிரடி
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான காவல்துறையினரின் நடவடிக்கைகள் புத்தாண்டுக்கு பின்னர் இரட்டிப்பாகும் என காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளை நேற்று (14) சந்தித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,"குற்றம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளன.
காவல்துறையினரின் நடவடிக்கைகள்
புதுவருடத்தின் பின்னர் பாதாள உலக குழு நடவடிக்கையை ஒடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.
இது குறித்து காவல்துறையினரிடம் மிக பெரிய ஆற்றல் உள்ளது.
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக ஒரு சிறிய அளவு மட்டுமே வெளியிடப்பட்டது.
இதனை இரட்டிப்பாக்குதல் மற்றும் மும்மடங்காக அதிகரிப்பதன் மூலம் விரைவாக நாட்டை சீர்படுத்தலாம்.''என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 9 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்