தொடர் படுகொலைகளுக்கு பின்னணியில் இருக்கும் கும்பல் : பாதுகாப்பு அமைச்சர் தகவல்
அண்மைய காலங்களாக நடைபெற்றுவரும் பாதாள உலக நடவடிக்கைகள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவின் செயல் என்பது இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (22.02.2025) பொது மக்களின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நடந்த ஒவ்வொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
பொதுப் பாதுகாப்பு
மேலும் நாட்டு மக்களின் பொதுப் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு என்றும் தேசியப் பாதுகாப்பில் எந்தச் சீர்குலைவையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு குழுவால் இந்த பாதாள உலக நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவது தெரியவந்துள்ளதுடன் இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் குறிப்பிபட்டார்.
இதேவேளை, ஆயுதப் பயிற்சி பெற்ற பின்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22.02.2025) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
