சுகாதார அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனு
சுகாதார அமைச்சருக்கு எதிராக பொதுமக்கள் மூலம் கையொப்பமிடப்பட்ட மனுவொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவானது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் இன்று(08) சமர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றால் நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இந்த மனுவை ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இதில் பங்கேற்றுள்ளது.
மக்களின் கையொப்பத்துடன் கூடிய மனுவை இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளித்த அவர்கள், சுகாதார அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஏனைய கட்சிகள் முன்வராத போதிலும் நாட்டு மக்கள் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.