விவசாயிகளுக்கு மற்றுமொரு அதிர்ச்சிகர தகவல்
farmer
seeds
imports
By Sumithiran
நுவரெலியா அரச விவசாய பண்ணையில் விதைகள் வெற்றிகரமாக உற்பத்தி செய்யப்படுவதை அடுத்து ஏழு வகை விதைகளின் இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் முதல் இந்த கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சின்னவெங்காயம், உழுந்து, சோளம் மற்றும் நிலக்கடலை ஆகிய விதைகளை இறக்குமதி செய்வதை வரையறுப்பது தொடர்பிலேயே அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா அரச விவசாய பண்ணையில் உருளைக்கிழங்கிற்கான விதை உற்பத்தி முன்னெடுக்கப்படுவதுடன், சின்ன வெங்காயம், உழுந்து, நிலக்கடலை மற்றும் சோள விதைகளுக்கான உற்பத்தியும் வெற்றிகரமாக இடம்பெறுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்