தளர்த்தப்படும் இறக்குமதி கட்டுப்பாடுகள் - அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தல்
அடுத்த வாரத்தில் இருந்து பல பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
300 முதல் 400 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மார்ச் 2020 முதல் அதன் நீடித்த கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக அரசாங்கம் பல பொருட்களுக்கு தடை விதித்தது.
இறக்குமதி கட்டுப்பாடு
பொருளாதார நெருக்கடி காரணமாக இறக்குமதி மீதான தடை கடந்த ஆண்டு நவம்பர் வரை நீடித்தது, அதன் பிறகு அரசாங்கம் பல பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தொகுப்பாக தளர்த்த நடவடிக்கை எடுத்தது.
தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை ஜூன் மாதத்திற்குள் முன்வைக்க இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக ஐரோப்பிய யூனியனுக்கு (EU) அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
