முகநூல் போதைப்பொருள் விருந்து: கண்டி பிரதிமேயரின் மகள் உட்பட 27 பேர் கைது
தெல்தெனியாவில் முகநூல் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட விருந்து மீது காவல்துறையினர்ர் நடத்திய சோதனையைத் தொடர்ந்து போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் கண்டி துணை மேயர் ருவன் குமாரவின் 26 வயது மகள் உட்பட27 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சனிக்கிழமை (13) அதிகாலையில் நிகழ்வு நடைபெற்ற விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் சோதனை நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆண்கள்,பெண்கள் என 30 பேர் கைது
இந்த நடவடிக்கையின் போது,காவல்துறையினர் 4,134 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத் (ஐஸ்), 1,875 மில்லிகிராம் ஹாஷிஷ், 2,769 மில்லிகிராம் குஷ், 390 மில்லிகிராம் கொக்கெய்ன், 804 மில்லிகிராம் காளான்கள், 13 போதை மாத்திரைகள் மற்றும் 12 சட்டவிரோத சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கண்டி, முல்லேரியா, ஹட்டன், பிலகல, அதுருகிரிய, கொட்டகெதர, ஹோமாகம, தொம்பே, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 31 வயதுக்குட்பட்ட 24 ஆண்கள் கைது செய்யப்பட்டதாகவும், துணை மேயரின் மகள் உட்பட 21 முதல் 26 வயதுக்குட்பட்ட நான்கு பெண் சந்தேக நபர்கள் கண்டி, நீர்கொழும்பு மற்றும் பூண்டலுஓயாவைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிணையில் விடுதலை
தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து சந்தேக நபர்களும் முற்படுத்தப்பட்டு தலா ரூ.100,000 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

டிசம்பர் 17 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 12 மணி நேரம் முன்