நடிகர் அர்ஜுனுக்கும் தொற்றியது கொரோனா
corona
actor
confirm
arjun
By Sumithiran
தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நடிகர் அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
“எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். அனைவரும் தயவுசெய்து பாதுகாப்பாக இருக்கவும். முகக்கவசம் அணிய மறந்து விட வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் அதிலிருந்து மீண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.