கொரோனா தொற்றுக்குள்ளான கமலின் தற்போதைய நிலை என்ன? வெளியானது அறிவிப்பு
covid
hospital
kamalhaasan
By Sumithiran
கொரோனா தொற்றிலிருந்து நடிகர் கமல்ஹாசன் குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த மாதம் 22-ம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் குணமடைந்து உள்ளதாகவும் இரண்டு நாட்கள் மட்டும் அவர் தனிமைப்படுத்தி கொண்டு டிசம்பர் 4-ம் திகதி முதல் அவரது வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.