பிரபல நடிகர் ரோபோ சங்கர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) நேற்றிரவு 8.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தின் அரசியல் பிரமுகர்கள் பலரும் ரோபோ சங்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரோபோ சங்கர் மறைந்த செய்தியறிந்து வருந்தமடைந்ததாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
ரோபோ சங்கரின் திடீர் மறைவையொட்டி நடிகரும், மநீம தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் நேற்றிரவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘ரோபோ புனைப்பெயர் தான். என் அகராதியில் நீ மனிதன். ஆதலால் என் தம்பி.
போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய், என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால், நாளை நமதே என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன்
இதேவேளை சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய நடிகர் ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படத்துறை மற்றும் அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பாரதிய ஜனதாக் கட்சியின் பிரமுகர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
