மன்னார் பக்கம் திரும்பியுள்ள செல்வம் எம்.பியின் அடுத்த நகர்வு!
அண்மையில் தமிழர் அரசியல் தரப்பில் பாரிய பேசு பொருளுக்கு உள்ளாக்கி இருக்கும் விடயம்தான் ஐபிசி தமிழும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும்.
காரணம் ஐபிசியில் அண்மையில் வெளியான உண்மைகள் பேசட்டும் நிகழ்சியானது, செல்வம் அடைக்கலநாதனின் குரலை ஒத்த குரல் பதிவு விவகாரம் தொடர்பான உன்மைத்தன்மையை வெளிக்கொண்டு வந்தது.
இதன் விளைவு நாடாளுமன்றம் வரை ஒலித்திருந்ததுடன் சமூக ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டு வந்தது.
இதையடுத்து, மன்னார் மக்கள் ஏதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக செல்வம் அடைக்கலநாதன் காரசாரமாக நாடாளுமண்றத்தில் உரையாடி இருந்தார்.
இது வரவேற்கத்தக்க விடயமாக அரசியல் விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இது போன்று மன்னார் மக்களின் பிரச்சினைகள் ஏராளமானவை இன்னும் தீர்வு எட்டப்படாமல் உள்ள நிலையில் அவற்றையும் பட்டியல் இட்டு நாடாளுமன்றத்தில் பேசினால் மக்களின் பல பிரச்சனைகள் தீர்க்கப்படலாம் என்பதை சுட்டிக்காட்டி வருகின்றது இன்றைய ஐபிசி தமிழின் உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |