மோடி வந்து திரும்பியவுடன் இலங்கையில் செயற்பாட்டை ஆரம்பித்தது அதானி நிறுவனம்
இந்திய பிரதமர் நரேந்திரமோடி(narendramodi) இலங்கைக்கு வந்து திரும்பிய கையுடன் இலங்கையில் தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது அதானி(adani) நிறுவனம்.
இதன்படி அதானி துறைமுகங்கள் மற்றும் விசேட பொருளாதார வலயங்கள் நிறுவனம்(Adani Ports and Special Economic Zone Ltd (APSEZ) )(அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல் எகனொமிக் ஸோன் லிமிடெட்), கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையம் அதன் பணிகளை ஆரம்பித்திருப்பதாக அறிவித்துள்ளது.
800 மில்லியன் டொலர்கள் முதலீடு
இதுகுறித்து கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தியை அரச - தனியார் கூட்டிணைவின் அடிப்படையில் இணைந்து முன்னெடுத்திருக்கும் அதானி நிறுவனம் மற்றும் இலங்கையின் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் செஸ் லிமிடெட் என்பன வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்த அபிவிருத்தித் திட்டத்துக்கென 800 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பெருமைமிகு முன்முயற்சி
அதேவேளை கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதானது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பிராந்திய ஒத்துழைப்பில் ஒரு மைல்கல் அடைவாகும் என அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
அத்தோடு இம் முனையமானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் எதிர்கால வர்த்தக மேம்பாட்டைக் காண்பிப்பதுடன் மாத்திரமன்றி, இலங்கைக்கு பெருமைமிகு முன்முயற்சியாகத் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
