பல்கலை மாணவர்களுக்கு கிடைக்கப்போகும் மேலதிக கொடுப்பனவு
Ministry of Education
Money
Floods In Sri Lanka
By Sumithiran
பல்கலை மாணவர்களுக்கு மேலதிக மஹபொல கொடுப்பனவு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சிரமமின்றி மீண்டும் ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டு, இதற்கு முன்னர் கடந்த 28 ஆம் திகதியும் மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை
அதற்கு மேலதிகமாக, வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள மஹபொல தவணைக்கட்டணத்தை எதிர்வரும் 05 ஆம் திகதி வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி