அடுத்த சாதனையை படைக்கப்போகும் ஆதித்யா எல்-1: தற்போதைய நிலையை வெளியிட்ட இஸ்ரோ..!
இந்தியாவில் இருந்து சூரியனுக்கு அனுப்பட்ட ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் தனது சுற்றுவட்ட பாதையை அதிகரித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஶ்ரீ ஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த 02 ஆம் திகதி காலை 11.50 மணி அளவில் இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
முதல் விண்கலம்
ஆதித்யா எல்1 விண்கலம் தனது இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்தியா சார்பில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான் என்ற பெருமையை ஆதித்யா எல் 1 பெறும். இந்நிலையில், தனது பயணத்தை வெற்றிகரமாக செய்துக்கொண்டிருக்கும் ஆதித்யா எல்-1 தனது சுற்றுவட்ட பாதையை அதிகரித்துள்ளது.

விண்கலத்தின் முதல் சுற்றுவட்டப் பாதையானது ஞாயிற்றுக்கிழமை 11.40 மணியளவில் மாற்றப்பட்டது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 245 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 22,459 கி.மீ தொலைவிலும் இருக்கும்படி அதிகரித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதன் இரண்டாவது சுற்றுவட்ட பாதைக்கு முன்னேறியுள்ளது.
2 வது சுற்றுப்பாதை
Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 4, 2023
The second Earth-bound maneuvre (EBN#2) is performed successfully from ISTRAC, Bengaluru.
ISTRAC/ISRO's ground stations at Mauritius, Bengaluru and Port Blair tracked the satellite during this operation.
The new orbit attained is 282 km x 40225 km.
The next… pic.twitter.com/GFdqlbNmWg
அதன்படி பூமியில் இருந்து குறைந்தபட்சம் 282 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 40,225 கி.மீ தொலைவிலும் இருக்கும்படி அதிகரித்துள்ளது.
மேலும் இந்த விண்கலம் சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும் 2வது சுற்றுப்பாதை வருகின்ற 10 ஆம் திகதியன்று 2.30 மணியளவில் மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.