இடைநிலை தரங்களுக்கு மாணவர் அனுமதி : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
Ministry of Education
Sri Lankan Schools
By Jaso
அரச பாடசாலைகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் இடைநிலைத் தரங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் போது விளையாட்டுத் திறன் அடிப்படையில் அந்த அனுமதி இருக்காது என்று கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வியமைச்சு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அமைச்சின் சுற்றறிக்கை மூலம்
இதன்படி எதிர்காலத்தில், இது தொடர்பாக அமைச்சின் சுற்றறிக்கை மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மட்டுமே இடைநிலை தரங்களுக்கான சேர்க்கை வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி