பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு
2024ஆம் கல்வியாண்டிற்கு 1, 5, 6 ஆம் வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் விண்ணப்பங்களை பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்து அதிபர்கள் நேர்முகப்பரீட்சை நடத்தி மாணவர்களை உள்வாங்குவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரம் பாடசாலைகளில் ஆறாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது.
கல்வி அமைச்சு
2024 ஆம் ஆண்டில், தரம் 1, 5 மற்றும் 6 தவிர இடைநிலை வகுப்புகளுக்கு க.பொ.த. (உயர்தரம் உட்பட) மாணவர் அனுமதி தொடர்பான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.
மேலும் அந்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருந்தால், கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின்படி அதிபர்கள் நேர்காணல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை கல்வி அமைச்சிற்கு அனுப்புவார்கள்.
அத்துடன், பாடசாலைகளுக்கான அனுமதிக் கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது எனவும் அமைச்சு மேலும் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |