விபத்தில் சிக்கிய காவல்துறை உத்தியோகத்தர் : தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Sri Lanka Police
Trincomalee
Accident
By Laksi
திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றினால் படுகாயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (06)மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், திருகோணமலை கண்டி பிரதான வீதியின் 5ம் கட்டை பகுதியில் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுக்கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காயங்களுக்கு உள்ளானவர் திருகோணமலை தலைமையக காவல்துறை நிலையத்தில் கடமையாற்றிவரும் சீனக்குடாவை வசிப்பிடமாகக் கொண்ட காவல்துறை உத்தியோகத்தர் வயது(35)எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்பு வெளி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 13 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்