ஆப்கானின் தலிபான் படைகளின் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு பேரிழப்பு :எல்லைப்பகுதியில் கடும் பதற்றம்
வடக்கு எல்லையில் உள்ள பல மலைப்பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானின் தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
"பழிவாங்கும் நடவடிக்கை"("an act of retaliation") என்று அழைக்கப்படும் இந்த தாக்குதலில் 58 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார்.அத்துடன் பாகிஸ்தான் இராணுவத்தின் 25 நிலைகளை கைப்பற்றியதாகவும் 30 இராணுவத்தினர் படுகாயமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் அத்துமீறல்
ஆப்கானிஸ்தான் வான்வெளியை மீறி பாகிஸ்தான் வியாழக்கிழமை தனது எல்லைக்குள் ஒரு சந்தையில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாக ஆப்கான் அரசு கூறியது. எனினும் இந்த தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் உத்தியோகபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தான் தமது 58 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்பதை மறுத்து, தனது ஆயுதப்படைகளில் 23 பேர் கொல்லப்பட்டதாகவும், "200 தலிபான் மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் செயலிழக்கச் செய்யப்பட்டனர்" என்றும் கூறியது.
மூடப்பட்டன எல்லைகள் : சிக்கி தவிக்கும் பாரவூர்திகள்
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, ஆப்கானிஸ்தான் தாக்குதல்கள் "எந்தவொரு தூண்டுதலும் இல்லாமல்" நடத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், தனது நாட்டின் படைகள் "ஒவ்வொரு செங்கலுக்கும் ஒரு கல்லால்" பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்தார்.
இந்த மோதலை அடுத்து பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான இரண்டு முக்கிய பாதைகள் - வடக்கில் டோர்காம் மற்றும் தெற்கில் சாமன் - மூடப்பட்டுள்ளன, இதனால் இருபுறமும் பொருட்களை ஏற்றிச் சென்ற நூற்றுக்கணக்கான பாரவூர்திகள்இடைநடுவில் சிக்கித் தவிக்கின்றன.
images -bbc
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
