நூலிழையில் தப்பிய மகன்! துப்பாக்கியுடன் காத்திருந்த தந்தை கைது
தனது சொந்த மகனை துப்பாக்கியால் சுடுவதற்காக காத்திருந்த தந்தையொருவரை ஆரச்சிகட்டுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நபர் ஒருவர் துப்பாக்கியுடன் இருப்பதாக காவல்துறையினருக்கு சென்ற தொலைப்பேசி அழைப்பை தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தனது மகன் நான்கு வயதாக இருக்கும் போதே, சந்தேகநபர் சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
காரணம்
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்ததற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தொடர்புடைய துப்பாக்கி உள்நாட்டு துப்பாக்கி என்றும், அது 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆரச்சிகட்டுவ பகுதியில் ஒரு குண்டர் மூலம் தனக்கு வழங்கப்பட்டதாக சந்தேக நபர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் துப்பாக்கியும் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
