ஆப்கானில் இராணுவ தளத்தை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் -14 இராணுவத்தினர் உடல் சிதறி பலி
death
army
afghanistan
By Vasanth
ஆப்கானிஸ்தானில் இராணுவ தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 14 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர்.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கார்ஹரில் பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஷிர்ஷாத் மாவட்டத்தில் உள்ள இராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர்.
வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்த பயங்கரவாதிகள் அதை இராணுவ தளத்தின் நுழைவாயில் முன்பு நிறுத்தி வெடிக்கச் செய்தனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது.
இந்த குண்டுவெடிப்பில் 14 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி