ஆப்கானில் மற்றுமொரு தாக்குதலுக்கு சாத்தியம் - எச்சரிக்கும் அமெரிக்கா
blast
afghanistan
bomb
By Vanan
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தை இலக்குவைத்து மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
ஆகவே விமான நிலையத்திற்கு அருகில் ஒன்று கூடியிருக்கும் அமெரிக்க மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய படையினர், இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
எனினும் அமெரிக்க படையினர் தொடர்ந்தும் அங்கு நிலைகொண்டுள்ளதுடன், மீட்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 170 பேர் வரை உயிரிழந்த நிலையில், இந்த புதிய தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி