ஆப்கானுக்குள் ஊடுருவும் வெளிநாட்டு தீவிரவாதிகள்
terrorist
afghanistan
By Vanan
வெளிநாட்டுத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஐ.நா.வின் கண்காணிப்பு அறிக்கையில், ஐ.எஸ். கே மற்றும் அல் கொய்தாவின் வெளிநாட்டுத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐஎஸ் - கே மற்றும் தாலிபான்களுடன் அல் கொய்தா கூட்டுறவை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.
அல் கொய்தா அமைப்பின் பல மூத்த தீவிரவாத தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதால் அதனை தாலிபான்களுடன் ஒன்றிணைக்க ஹக்கானி நெட்வொர்க் முயற்சிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்