பொதுமக்களை வெளியேற்றும் பிரித்தானியாவின் செயற்பாடு இன்றுடன் நிறைவு
ஆப்கானிஸ்தானில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் பிரித்தானியாவின் செயற்பாடு இன்றுடன் முடிவடைகின்றது. இதனை பிரித்தானிய ஆயுதப் படைகளின் தலைவர் ஜெனரல் சேர் நிக் கார்ட்டர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆப்கானை தலிபான் அமைப்பு கைப்பற்றிய நிலையில் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆப்கான் பொதுமக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முந்தியடித்துவரும் நிலையில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மக்களை தமது நாட்டிற்கு அழைத்துச் சென்று வருகின்றன.
இந்த நிலையில் ஆப்கான் மக்களை பிரித்தானியாவிற்கு அழைத்துச் செல்லும் செயற்பாடானது இன்றுடன் முடிவடைகின்றது.
இருந்த போதிலும் நூற்றுக்கணக்கானவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்த பிரித்தானியாவிற்கு வருவதற்கு தகுதியுடையவர்களாக இருந்த போதிலும், அவர்கள் அனைவரையும் காப்பாற்ற முடியவில்லை என்பது இதயத்தை நொருக்கும் விடயம் என ஜெனரல் சேர் நிக் கார்ட்டர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் வேறு வழிகள் ஊடாக வெளியேறி பிரித்தானியாவிற்கு வருகைதரும் ஆப்கானியர்களை வரவேற்ற காத்திருப்பதாக பிரித்தானிய ஆயுதப் படைகளின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றுடன் பொதுமக்களை வெளியேற்றும் பணிகள் நிறைவடைவதாகவும், "நாங்கள் வெளியேற்றத்தின் முடிவை அடைகிறோம் எனவும், எஞ்சியுள்ள விமானங்களில் படைகளை வெளியேற்ற தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.