ஆபிரிக்க தலைவர்கள் உக்ரைன் நோக்கி திடீர் விஜயம்
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்தும் முனைப்பில் தென்னாபிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுடன் (Cyril Ramaphosa) ஆபிரிக்கத் தலைவர்கள் உக்ரைன் சென்றுள்ளனர்.
அந்தசமத்திலும், ரஷ்யா ஆகாயத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அதிபர் ரமபோசா புகையிரதம் மூலம் பூச்சா (Bucha) நகரத்தை சென்றடைந்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள்
ஸாம்பியா, செனகல், எகிப்து ஆகிய நாடுகளின் தலைவர்களைக் கொண்ட குழுவுக்கு தென்னாபிரிக்க அதிபர் சிரில் ரமபோசா தலைவராக பொறுப்பேற்று இந்த பயணத்தை முன்னெடுத்துள்ளார்.
இந்த குழுவினர் உக்ரைனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் (Volodymyr Zelenskyy) உக்ரைன் தலைநகர் கீவ்வில் பேச்சு நடத்தவிருக்கின்றனர்.
அதனைத்தொடர்ந்து நாளை அவர்கள் ரஷ்யா சென்று ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புட்டினைச் (Vladimir Putin) சந்திக்கவுள்ளனர்.
