மீண்டும் அதிகரிக்கப்பட்டது கோதுமை மாவின் விலை
wheat flour
prima
price increase
By Sumithiran
இலங்கையிலுள்ள முன்னணி கோதுமை மா விற்பனை நிறுவனமாகிய பிறீமா தனது உற்பத்திக் கலவையில் ஒன்றாகிய மில்க் பிராண்ட் என்ற மா விலையை 3 ரூபா 50 சதத்தினால் அதிகரித்துள்ளது.
இன்று தொடக்கம் இந்த விலை அதிகரிப்பு அமுலில் வருமென அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி 50 கிலோ பிறீமா மில்க் பிராண்ட் மாப் பொதியின் விலை 4175 ரூபாவாகும்.
இதேவேளை ரொட்டி செய்வதற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் கோதுமை மாவின் விலையும் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
மில்க் பிராண்ட் என்ற மாப் பொதி அதிகமாக பேக்கரி நிறுவனங்களால் கொள்வனவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்