தமிழ் தலைமைகளுக்கு இடையில் கைச்சாத்தாகவுள்ள ஒப்பந்தம்
13 ஆவது திருத்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள யாப்பு தொடர்பில் இறுதிக்கட்ட தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikkalanathan) தெரிவித்தார்.
இறுதிக்கட்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என அவர் ஐ.பி.சி. தமிழ் செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.
13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பாலான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலும், ஒப்பமிடுதலும்’ என்ற தலைப்பில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் கூட்டம் நடைபெற்றது
. கொழும்பு, வெள்ளவத்தையிலுள்ள தனியார் விடுதியில், இந்தக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மனோ கணேசன், சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், ரவூப் ஹக்கீம், பழனி திகாம்பரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் இவர்களுடன் என். சிறிகாந்தா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நேற்றைய கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியும் யாப்பு ஒன்றை முன்வைத்தாக செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.