இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது வரலாற்று தவறு : குமார் குணரட்ணம்

Sri Lanka Janatha Vimukthi Peramuna Kumar Gunaratnam India
By Sathangani Apr 05, 2025 09:32 AM GMT
Report

இலங்கை - இந்திய பாதுகாப்பு உடன்படிக்கையில் இலங்கை கைசாத்திட்டால் அது வரலாற்று தவறாக அமையும் முன்னிலை சோசலிச கட்சியின் குமார் குணரட்ணம் (Premakumar Gunaratnam) தெரிவித்துள்ளார்.

ஜேவிபியின் (JVP) முதலாவது கிளர்ச்சி இடம்பெற்ற ஏப்ரல் ஐந்தாம் திகதியன்று ஜேவிபி அரசாங்கம் இந்தியாவுடன் (India) பாதுகாப்பு உடன்படிக்கையில் கைசாத்திடுகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கும் (Sri Lanka) இந்தியாவுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மோடிக்கு அநுர வழங்கிய இலங்கையின் அதியுயர் விருது!!

மோடிக்கு அநுர வழங்கிய இலங்கையின் அதியுயர் விருது!!

இந்திய பிரதமரின் இலங்கை விஜயம்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் இலங்கைக்கு எதிர்காலத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும், பாதுகாப்பு உடன்படிக்கை எரிசக்திதுறை சம்பந்தமான உடன்படிக்கை உட்பட பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது வரலாற்று தவறு : குமார் குணரட்ணம் | Agreement Signed On The Day Of The Jvp Uprising

மோடி ஜயஸ்ரீமகாபோதிக்கு விஜயம் மேற்கொள்வார், மன்னார் மருத்துவமனைக்கு நிதியை அன்பளிப்பாக வழங்குவார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மோடி இதன் மூலம் என்ன எதிர்பார்க்கின்றார், அவர் இலங்கையின் துறைமுகங்களை திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க விரும்புகின்றார்.

இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டியில் ஈடுபட்டுள்ளன, இது இந்து சமுத்திரத்தில் இன்று காணப்படும் புவிசார் அரசியல் நிலவரம் தொடர்பானது.

ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா !

ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா !

நாட்டிற்கு துரோகம் இழைத்தல்

உத்தேச பாதுகாப்பு உடன்படிக்கையில் இலங்கை கைசாத்திட்டால் அது புவிசார் அரசியலில் தேவையற்ற விதத்தில் சிக்குப்படும். இந்த உடன்படிக்கையில் கைசாத்திடுவது வரலாற்று தவறாக அமையும்.

இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது வரலாற்று தவறு : குமார் குணரட்ணம் | Agreement Signed On The Day Of The Jvp Uprising

சமீபகாலத்தில் உலகின் எந்த நாடும் வேறு ஒரு நாட்டுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைசாத்திடவில்லை, ஆனால் இலங்கை பாதுகாப்பு தொடர்பில் சில நாடுகளுடன் புரிந்துணர்வினை ஏற்படுத்தியது, இன்று கைசாத்திடப்படவுள்ள உடன்படிக்கையின் பின்னால் அரசியலே உள்ளது.

ராஜபக்சாக்களோ அல்லது ரணில் விக்ரமசிங்கவோ (Ranil Wickremesinghe) நாட்டிற்கு துரோகம் இழைப்பது புதிய விடயமல்ல. மாறாக இவ்வாறான உடன்படிக்கைகளிற்கு எதிராக வீதியில் இறங்கிய அரசாங்கம் இன்று நாட்டை ஆட்சி செய்கின்றது.

ஜேவிபி தன்னை மாற்றிக்கொண்டு இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைசாத்திடுகின்றது. ஜேவிபி தனது பழைய கொள்கைகளை கைவிட்டுவிட்டது போல தோன்றுகின்றது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படை கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படை கப்பல்

ஜேவிபியின் கிளர்ச்சி 

இது ஜேவிபியின் உறுப்பினர்களின் மனச்சாட்சியுடன் தொடர்புடைய விடயம், இந்த அரசாங்கம் சோசலிஸ ஆட்சிமுறையை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தது.

ஆனால் கல்வி, வரி போன்றவை தனியார் மயப்படுத்தப்படுவது குறித்து அக்கறையற்றதாக காணப்படுகின்றது.

இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது வரலாற்று தவறு : குமார் குணரட்ணம் | Agreement Signed On The Day Of The Jvp Uprising

ஜேவிபியின் நீண்டகால உறுப்பினர்களும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவர்களும் இந்த தருணத்தில் வெறும் பார்வையாளர்களாக இருக்கப்போகின்றார்களா என நாங்கள் கேள்வி எழுப்புகின்றோம்.

ஒப்பந்தங்களில் கைசாத்திட்டு இவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதே அவரின் விஜயத்தின் நோக்கம்

1971 ஏப்ரல் ஐந்தாம் திகதி ஜேவிபியின் கிளர்ச்சி இடம்பெற்ற தினத்தில் இந்த ஒப்பந்தங்கள் கைசாத்திடப்படுவது விதியின் திருப்பம்“ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா !

ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025