நாட்டில் கைவிடப்பட்ட காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை! அமைச்சர் அறிவிப்பு
Mahinda Amaraweera
Sri Lanka Economic Crisis
Sri Lanka Food Crisis
Ministry of Agriculture
By Kanna
நாடளாவிய ரீதியில் விவசாயம் செய்யப்படாத அல்லது கைவிடப்பட்ட விவசாய காணிகளை உணவுப் பயிர்ச் செய்கைக்காக 5 வருட காலத்திற்கு அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.
பொருத்தமான உணவுப் பயிர்களை பயிரிடுவதற்காக குறித்த காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்படும் உணவு நெருக்கடியை தடுக்கும் முகமாக குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு மாதங்களில் இலங்கை கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் என ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
