முன்னாள் இராஜாங்க அமைச்சர் பௌசிக்கு கடூழிய சிறைத்தண்டனை

A H M Fowzie Sri Lanka Supreme Court of Sri Lanka Netherlands
By Sathangani Aug 27, 2024 07:48 AM GMT
Report

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு (A.H.M. Fowzie) 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் அதனை 10 வருட காலத்திற்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு (Colombo) மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (27) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பௌசி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, குறித்த குற்றத்திற்காக அவரைக் குற்றவாளி என அறிவித்து நீதிபதி இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளதுடன் 4 இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர் பரிதாபமாக உயிரிழப்பு : இறுதிக் கிரியைகள் இன்று

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர் பரிதாபமாக உயிரிழப்பு : இறுதிக் கிரியைகள் இன்று

 ​நெதர்லாந்திலிருந்து கிடைத்த வாகனம்

2010 இல் பௌசி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய போது, ​​நெதர்லாந்திலிருந்து (Netherlands) அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் கிடைத்தது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பௌசிக்கு கடூழிய சிறைத்தண்டனை | Ahm Fowzie For 2 Years Of Rigorous Imprisonment

குறித்த வாகனத்தை தனது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தியமை, அதற்காக அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளை ஈடுபடுத்தியமை மற்றும் வாகனத்தின் பராமரிப்புக்காக நிதியமைச்சின் சுமார் 10 இலட்சம் ரூபா பணத்தை செலவழித்தமை போன்ற 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பௌசி தனது வழக்கறிஞர் மூலம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

புதிய கடவுச்சீட்டு பெறவுள்ளோருக்கு வெளியான அவசர அறிவித்தல்

புதிய கடவுச்சீட்டு பெறவுள்ளோருக்கு வெளியான அவசர அறிவித்தல்

நீதிபதி உத்தரவு 

இதன்போது, 62 வருட அரசியல் அனுபவமுள்ள சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவர் இவ்வாறு செயற்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும், எனினும் அவர் முதல் சந்தர்ப்பத்திலேயே இலஞ்சம் வாங்கிய குற்றத்தை ஒப்புக்கொண்டதையும், தற்போது 86 வயதான முதியவர் என்பதையும் கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை வழங்குவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பௌசிக்கு கடூழிய சிறைத்தண்டனை | Ahm Fowzie For 2 Years Of Rigorous Imprisonment

அத்துடன் ஏ. எச். எம்.பௌசியின் கைரேகைகளைப் பெறவும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு : வெளியான அறிவிப்பு

அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு : வெளியான அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025