தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அகமதாபாத் - லண்டன் கேட்விக் விமான சேவை
அகமதாபாத் (Ahmedabad) - லண்டன் (London) கேட்விக் விமான சேவையை ஒகஸ்ட் 1ம் திகதி முதல் செப்டம்பர் 30ம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
அஹமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் விமானம் கடந்த மாதம் விபத்துக்குள்ளானது.
புறப்பட்ட சில விநாடிகளில் நிகழ்ந்த விபத்தை அடுத்து ஏர் இந்தியா விமான பயணங்கள் மீதான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்விகள் எழுந்தன.
ஏர் இந்தியா விமான சேவை
இந் நிலையில், அஹமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்துக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ள ஏர் இந்தியா நிர்வாகம், கேட்விக் விமான நிலையத்துக்கு பதில் ஹீத்ரூ விமான நிலையத்துக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இது தற்காலிகமானது, வாரம் 3 நாட்கள் மட்டுமே இந்த வழித்தடத்தில் விமான சேவை இருக்கும் என்றும் ஏர் இந்தியா கூறி உள்ளது. வழக்கமாக இந்த வழித்தடத்தில் 5 விமான சேவைகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

