பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: ஆரம்பமானது புதிய பாடத்திட்டம்
தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப பாடங்களுடன் செயற்கை நுண்ணறிவு (AI) கற்கைநெறி முன்னோடித் திட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (19) முதல் 20 பாடசாலைகளில் இந்த முன்னோடித் திட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தெரிவுசெய்யப்பட்ட 20 பாடசாலைகளில் 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் முன்னோடி திட்டத்தையே கல்வி அமைச்சு இன்று ஆரம்பித்துள்ளது.
எதிர்கால இலக்குகள்
எதிர்வரும் ஆண்டில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தப்பணிக்காக 100 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
தவிரவும் தெரிவு செய்யப்பட்ட 20 பாடசாலைகளில் மைக்ரோசாஃப்ட் கூட்டுத்தாபனத்தின் அனுசரணையுடன் இந்த முன்னோடித் திட்டம் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அவர்களின் எதிர்கால இலக்குகளை அடைவதற்குத் தேவையான பின்னணி வழங்கப்படும், எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |